பெரம்பலூர்

பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

DIN


பிரதம மந்திரி கிஸான்  சம்மான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதியுதவித்  திட்டமானது 24.2.2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதில், தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 6,000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணை ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.  இத்திட்டம், தற்போது அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர் நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்களைத் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். உயிரிழந்த தாய் அல்லது தந்தை பெயரில் நிலம் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பித்து ஜூன் 30-க்குள் பட்டா மாறுதல் செய்து பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT