பெரம்பலூர்

விதை சேமிப்புக் கிடங்குகள் திறப்பு

DIN

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் மற்றும் வேப்பந்தட்டையில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி. 
ஆலத்தூர் வட்டம், இரூர் மற்றும் வேப்பந்தட்டையில் தலா ரூ.1.50 கோடி வீதம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், வேளாண் இணை இயக்குநர் இளவரசன், வேளாண் துணை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT