பெரம்பலூர்

தேர்தல் விதிமீறல்களை கட்டணமில்லா தொலைபேசியில் புகார் அளிக்கலாம்

DIN


மக்களவை பொதுத்தேர்தலில் நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நகர், கிராமப் புறங்களிலும் அனுமதியின்றி பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இதர பரிசுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள், தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்தால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1800 425 2240 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். 
தொலைபேசியில் வரும் புகார்களைப் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்திட 2 பேர் கொன்ட 3 குழுக்கள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
மேலும், புகைப்படமாகவும், விடியோவாகவும் புகார் அனுப்ப இயஐஎஐக எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 
வாக்காளர் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை தெரிந்து கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT