பெரம்பலூர்

ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

DIN

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தார். 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தாவிடம், சாந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். திருச்சி மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கனகசபை மனைவி சாந்தி  (34). இவர் கட்சியின் ஒன்றிய மகளிரணி பாசறை செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். எம்.ஏ.பி.எட் படித்துள்ள இவர், தன்னிடம் 10 பவுன் நகை, ரூ.36 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலர் ப. அருள் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் சாந்தி மாலை அணிவித்தார்.
தொடர்ந்து,  சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்ற ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பச்சை நிற வேட்டி, துண்டு அணிந்து விவசாயிகளைபோல் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT