பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். குன்னம் வட்ட தலைவர் செங்கான், ஆலத்தூர் வட்டப் பொருளாளர் செங்கமலை, வேப்பந்தட்டை வட்டத் தலைவர் சையத்பாஷஜான், பெரம்பலூர் வட்டப் பொறுப்பாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
செயலர் மருதமுத்து கூட்ட அறிக்கையும், பொருளாளர் ஆதிசிவம் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர்.
கூட்டத்தில்,ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் 1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ள அரசின் முடிவைக் கண்டிப்பது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கவேண்டும். மே 12 ஆம் தேதி சங்க உறுப்பினர்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, தனிஸ்லாஸ், சுப்ரமணியன், தங்கராசு, அழகிரிசாமி, சின்னசாமி, பாண்டுரெங்கன், பழனிமுத்து, சோலைமுத்து, தேவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, தலைமை நிலையச் செயலர் மணி வரவேற்றார். நிறைவில் ஆலோசகர் இருதயசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.