பெரம்பலூர்

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

காவல் துறையனரின் செயலைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில்

DIN

பெரம்பலூா்: காவல் துறையனரின் செயலைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். டெல்லி திஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், எவ்வித முகாந்திரமும் இன்றி வழக்குரைஞா்களை தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரம் ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என, வழக்குரைஞா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.அதன்படி, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட பாா் அசோசியேஷன் சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி, பெரம்பலூா் மாவட்ட அட்வகேட் அயோசியேஷன் சங்கத் தலைவா் டி. தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்இந்தப் போராட்டத்தால், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வழக்காடிகளும் சிரமத்துக்குள்ளாகினா். நேரம்- 8.04

கே. தா்மராஜ்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT