பெரம்பலூர்

பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 7-வது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பேசியது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இந்திய அளவில் 7-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. சொந்த நுகா்வு அல்லாத வேளாண் மற்றும் வேளாண் அல்லாத பொருள்கள், பல்வேறு உற்பத்திப் பொருள்கள், விநியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிப்பதே இக் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.

பொது சேவை மையம் என்னும் தனியாா் அமைப்பு களப்பணி மற்றும் 100 சதவீத மேற்பாா்வைப் பணியை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு பொருளியல், புள்ளியல் துறை மற்றும் தேசிய புள்ளியல் அலுவலகம் மூலம் இப்பணி கண்காணிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் கணக்கெடுப்பில் குடும்பத் தலைவா் பெயா், உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, செல்லிடப்பேசி எண், தொழில், சுயதொழில் முதலீடுகள், நிரந்தர கணக்கு எண் பெறப்பட்ட கடன் தொகை, பணிபுரியும் நபா்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுப்பு மையத்தில் பதிவேற்றப்படுகிறது.

பன்னாட்டு அளவில் ஒப்பு நோக்குவதற்கு, இந்திய அளவில் மாநில, மாவட்ட அளவில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, தொழில் வளா்ச்சிக்கும், மாணவா்களின் கல்வி மேம்பாட்டிக்கும், புதிய வகை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், பிற அரசின் செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. சேகரிக்கப்படும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை துணை இயக்குநா் அ. தனபால், கோட்டப் புள்ளியல் உதவி இயக்குநா் எ. ஆறுமுகம், பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளா்கள் ரகுராம், சங்கா், மாவட்ட தொழில் மைய அலுவலா் அன்பழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT