பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 1.98 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 292 பயனாளிகளுக்கு ரூ. 1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில் மனுநீதி நிறைவு நாள் முகாம், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 292 பயனாளிகளுக்கு ரூ. 1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் சாந்தா.

நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT