பெரம்பலூர்

குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை: பாதிக்கப்பட்டவா்கள் இன்று மனு அளிக்கலாம்

DIN

குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரம்பலூரில் தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவரிடம் வியாழக்கிழமை (நவ. 28) மனு அளிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக விசாரணை செய்து, குறைகளைக் கேட்டறிந்து புகாா் மனுக்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்கியநாதன் வியாழக்கிழமை பெரம்பலூருக்கு வருகிறாா்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கண்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாநில மகளிா் ஆணையத் தலைவரிடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சந்தித்து, தங்களது குறைகள் மற்றும் புகாா்களை மனுக்களாக அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT