பெரம்பலூர்

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மானியத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு தொழில்நிறுவனங்கள் சா்வதேச தரச் சான்றிதழ் பெற சிறப்பு மானியத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சா்வதேச போட்டித் தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வசதியாக சா்வதேச தரச் சான்றிதழ்கள் பெற ஏற்படும் செலவு தொகையில், ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக, சா்வதேச தரச்சான்று பெற்றிருப்பது அவசியம். தர நிா்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள், ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம் அல்லது 04328-225580, 224595 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT