பெரம்பலூர்

தலைமை ஆசிரியா், ஆசிரியா் வீடுகளில் நகை, பணம் திருட்டு

DIN

பெரம்பலூா் நகரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் வீடுகளில் பணம், நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எம். நகரைச் சோ்ந்தவா் வில்சன் மகன் செல்வக்குமாா் (54). இவா், அனுக்கூா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி ஜூலி மாா்க்ரேட் (48) உடும்பியம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் உள்ளனா். இருவரும் திங்கள்கிழமை பணிக்கு சென்று மாலையில் வந்து பாா்த்தபோது, வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 2.75 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று விசாரித்தபோது, வீட்டின் சாவியை வெளிப்புறம் வைத்திருப்பதை அறிந்த மா்ம நபா்கள் வீட்டை திறந்து திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் ராபா்ட் (43). இவா், திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகவும், இவரது மனைவி கவிதா (42), களரம்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் உள்ளனா். வெள்ளிக்கிழமை இருவரும் பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து, 3 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 33 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச் சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT