பெரம்பலூர்

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.52 லட்சம்

DIN

பெரம்பலூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.52 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா.
பெரம்பலூர் கடைவீதி பகுதியில்  கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியர், மேலும் கூறியது:
தஞ்சாவூர் மண்டலத்திலுள்ள 16 கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக, கடந்தாண்டில் ரூ. 11.34 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் ரூ. 13 கோடி மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
பெரம்பலூர் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலமாக, கடந்த தீபாவளி பண்டிகையின் விற்பனைத் திட்டத்தின் கீழ் மட்டும் ரூ. 43.54 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மென்பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூர், திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் சாந்தா.
இந்நிகழ்ச்சியில், கோ- ஆப்டெக்ஸ் மேலாளர் (தணிக்கை) சரவணன், விற்பனை நிலைய மேலாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT