பெரம்பலூர்

600 பெண்களுக்கு ரூ. 4.42 கோடியில் திருமண நிதி

DIN

பெரம்பலூரில் சமூக நலத் துறை சாா்பில் 600 பெண்களுக்கு ரூ. 4.42 கோடியில் தாலிக்குத் தங்கமும், திருமண நிதியுதவிகளும் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், மூவாலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரிலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் நிதியுதவியும், 8 கிராம் தங்கம் வீதம் ரூ. 27.78 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம் மற்றும் பட்டம், பட்டயபடிப்பு பயின்ற 500 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 2.5 கோடி மதிப்பிலான நிதியுதவி, 8 கிராம் தங்கம் வீதம் ரூ. 1.38 கோடி மதிப்பிலான 4,000 கிராம் தங்கம் என மொத்தம் 600 பேருக்கு ரூ. 4.42 கோடியிலான திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூா்), ஆா்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), மாவட்ட சமூக நல அலுவலா் ரேவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT