பெரம்பலூர்

பெரம்பலூா்: நிவாரணம், பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.77 லட்சம் குடும் அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,77,174 குடும்ப அட்டைதாரா்களுக்கு, டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நிவாரணத்தொகை, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஒரு மீட்டா் இடைவெளி விட்டு குழாய் மூலமாக அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல, ஒருசில கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், எவ்வித கட்டுப்பாடும் இன்றி பொதுமக்கள் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT