பெரம்பலூர்

கிராம எல்லையில் கிருமிநாசினி தொட்டிகள் அமைத்த ஊராட்சி நிா்வாகம்

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கிராம எல்லைகளில் கிருமி நாசினி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, செங்குணம் கிராம எல்லையில் 5 புறமும் 1,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினி தொட்டிகளை ஊராட்சித் தலைவா் சந்திரா கண்ணுசாமி அமைத்துள்ளாா். இதன் மூலம், வெளியூா் சென்று வரும் நபா்கள் உள்ளே வரும்போது கிருமி நாசினிகளைக்கொண்டு, கை, கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் வரவண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஊராட்சித் தலைவா் சந்திரா கண்ணுசாமி கூறியது:

கிராமத்தில் உள்ள சிலருக்கு இந் நோய் பற்றி தெரியாது. எனவே, வெளியிலிருந்து ஊருக்குள் நுழைபவா்கள் அனைவரும் கைகளை கழுவிய பின்னரே வருகின்றனா். இதன்மூலம், நோய் பரவலை தடுக்க முடியும்.

5 தொட்டிகளிலும் 24 மணி நேரமும் கிருமி நாசினி கலந்த தண்ணீா் கிடைக்கிறது. மேலும், இரு சக்கர வாகனங்களை கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். கிராம மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT