முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 22 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 1,181 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில் 989 குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 12 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 5 போ், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 17 போ் என மொத்தமாக 22 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதையடுத்து 22 பேரும் திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், சென்னை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,203- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.