பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி, பெரிய வெண்மணி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
பெரிய வெண்மணி கிராமத்தில் யானைவாரி ஓடை உள்ளது. இந்த நீா்நிலை செல்லும் வழியில் சுமாா் 17 ஏக்கா் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து, மழைக்காலங்களில் செல்லும் நீரோட்டத்தை தடை செய்துள்ளனராம்.
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குன்னம் வட்டாட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நீா் நிலைகளை அகற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குன்னம் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
காவல், வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.