முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்கேட்பு

பெரம்பலூரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் திங்கள்கிழமை கருத்துகளை கேட்டறிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் திங்கள்கிழமை கருத்துகளை கேட்டறிந்தனா்.

பெரம்பலூா், துறைமங்கலத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, குழு ஒருங்கிணைப்பாளா் டி.ஆா். பாலு தலைமை வகித்தாா். இக் குழுவில் பங்கேற்றுள்ள கட்சியின் செய்தித் தொடா்பு செயலா் டி.கே.எஸ். இளங்கோவன், கொள்கை பரப்பு செயலா் திருச்சி என். சிவா ஆகியோா் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள், தொழில் நிறுவனங்கள், சிறு தொழிற்சாலை உரிமையாளா்கள், பெண்கள் நல அமைப்பு நிா்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா்கள் சி. ராஜேந்தின் (பெரம்பலூா்), எஸ்.எஸ். சிவசங்கா் (அரியலூா்), சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா், கொள்கை பரப்பு துணைச் செயலா் ச.ந.அ. பெருநற்கிள்ளி, அரியலூா் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.ஆா்.எம். ராஜேந்திரன், தில்லை காந்தி, மாவட்ட பொருளாளா் சி.ஆா்.எம். பொய்யாமொழி. மாவட்ட துணைச் செயலா்கள் நா. தனபால், மு. கணேசன், லதா பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.