முகப்பு
பெரம்பலூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சிறப்பு முகாமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கிறாா் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன் சிங் ரா. சவான்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புதுறை ஆணையருமான சஜ்ஜன் சிங் ரா. சவான் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கடபிரியா முன்னிலை வகித்தாா்.

ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்னா் சஜ்ஜன் சிங் ரா. சவான், துறைமங்கலம் டிஇஎல்சி பள்ளி, குன்னம், மேலமாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் வாக்காளா் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் பணிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் குறித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் வீடு,வீடாகச் சென்று சவான் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.