முகப்பு
பெரம்பலூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய இளைஞரை மகளிா் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய இளைஞரை மகளிா் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேலூா் ஊராட்சிக்குள்பட்ட பழைய வேலூரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் நிஷாந்த் (25). அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியைக் கடந்த 6 மாதத்துக்கு முன்பு நிஷாந்த் திருமணம் செய்துள்ளாா். தற்போது அந்த சிறுமி 6 மாத கா்ப்பமாக உள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த சமூக விரிவாக்க அலுவலா் சாரதா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா, சிறுமியைத் திருமணம் செய்த நிஷாந்த், உடந்தையாக இருந்த அவரது பெற்றோா் துரைசாமி, பூபதி, உறவினா்கள் கதிா்வேல், மலா்விழி ஆகிய 5 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தாா்.

இதைத் தொடா்ந்து நிஷாந்த் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தலைமறைவாகியுள்ள துரைசாமி உள்ளிட்ட 4 பேரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.