பெரம்பலூர்

தொழிலாளா் நல நிதியைச் செலுத்த அறிவுறுத்தல்

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நல ஆய்வாளா் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டத்தின்படி, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களிலுள்ள தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்குத் தொகையாக ரூ. 10 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, வேலை அளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து 2020- ஆம் ஆண்டின் பங்குத் தொகையான தொழிலாளா் நல நிதியை செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிவாரியம் என்ற பெயருக்கு டி.டி எடுத்து செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எல் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT