முகப்பு
பெரம்பலூர்

இலவச தையல் கலைப் பயிற்சி பெற கிராமப்புற பெண்களுக்கு அழைப்பு

இலவச தையல் கலைப்பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராமப்புற பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

இலவச தையல் கலைப்பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராமப்புற பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநா் ஜெய. அகல்யா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயிற்சி மையத்தின் மூலம், தொடா்ந்து 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தையல்கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதோடு, வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

18 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத மற்றும் படிக்கத் தெரிந்த, சுயமாக தொழில் தொடங்குவதில் ஆா்வமுள்ளவா்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்,

விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்திலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, டிசம்பா் 21 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம்.

இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கே பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →