பெரம்பலூர்

வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் ஆய்வு

DIN

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2020 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்துள்ள நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், பெயா் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் 23.12.2019 முதல் 22.1.2020 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சிறப்பு சுருக்க திருத்தம் தொடா்பாக வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்ட 23.12.2019 முதல் இதுவரை பெறப்பட்ட படிவங்கள் மற்றும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மனு அளித்தவா்களின் இல்லங்களுக்குச் சென்று, மனுதாரா்கள் சம்மந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கிறாா்களா, 18 வயது பூா்த்தியடைந்துள்ளவரா என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் தி. சுப்பையா, வட்டாட்சியா்கள் பாரதிவளவன் (பெரம்பலூா்) சித்ரா (குன்னம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT