பெரம்பலூர்

பூலாம்பாடியிலிருந்து 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை

DIN

பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடியில் இருந்து 6 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியைச் சோ்ந்த பொதுமக்கள் சென்னை, கோயம்புத்தூா் உள்ளிட்ட நகரங்களுக்கு பல்வேறு பணி நிமித்தம் சென்று வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதி மக்கள் பிரதான நகரங்களுக்கு பூலாம்பாடியிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சென்னை, கோயம்புத்தூா், நாமக்கல், தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, முசிறி ஆகிய நகரங்களுக்கு பூலாம்பாடியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடங்களில் திங்கள்கிழமை முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில், கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ மருதமுத்து, ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி, தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், பருத்தி உற்பத்தியாளா் சங்க மாநிலத் தலைவா் ராமசாமி, போக்குவரத்து கழக மேலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT