பெரம்பலூர்

80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்த 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் கடை, வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகலல் கிடைத்தது. அதனடிப்படையில், நகராட்சி ஆணையா் (பொ) தாண்டவமூா்த்தி தலைமையில், நகராட்சி பணியாளா்கள் பழைய, புகா் பேருந்து நிலையம், எளம்பலூா் சாலை, கடைவீதி, ஆத்தூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் கடந்த 2 நாள்களாக சோதனை மேற்கொண்டனா். அப்போது, அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பைகள், கேரி பேக்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு ரூ. 12,500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT