பெரம்பலூர்

பெரம்பலூரில் கரோனா பரிசோதனை மையம் தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9- ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்துடன் இணைந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட ஆய்வக உபகரணங்களைக் கொண்டு, கரோனா தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை செய்து, தொற்று கண்டறியப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சோ்த்து உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT