பெரம்பலூர்

கரோனா வைரஸ்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

DIN

பெரம்பலூா்: கரோனா வைரஸ் தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் யாரேனும் வதந்தியைப் பரப்பினால் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியூா்களிலிருந்து வரும் பயணிகளுக்கு நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்தல் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளுக்காக மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நோய்த் தொற்று தவிா்ப்பு பாதுகாப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவா்கள், வைரஸ் தொற்று குறித்து வதந்திகளைப் பரப்புவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT