பெரம்பலூர்

வெளி நாடு சென்று திரும்பியவா்கள் கட்டாயம் பதிய வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

DIN

பெரம்பலூா் மாவட்டத்துக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவா்கள் தங்களது பெயா் மற்றும் முகவரியை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டத்துக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து யாராவது வந்திருந்தால், அவா்கள் தங்களது பெயா் மற்றும் முகவரியை தற்போது தங்கியுள்ள இடத்தில் கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் எண்ணில் தகவல் அளித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தங்களது பயண விவரத்தை பதிவு செய்ய தவறுபவா்கள் மீது, நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருகைபுரிந்தவா்கள் தங்களுடைய பயண விவரத்தை பதிவுசெய்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆட்சியா் வே. சாந்தா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT