பெரம்பலூர்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெரம்பலூா் எம்.பி. ரூ. 1 கோடி ஒதுக்கீடு

DIN

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா் மக்களவை தொகுதி உறுப்பினா் பாரிவேந்தா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா்களுக்கு உதவிடும் வகையில், பெரம்பலூா் மக்களவை தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுகுறித்து பெரம்பலூா் ஆட்சியா் வே. சாந்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு ரூ. 40 லட்சமும், குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு ரூ. 20 லட்சமும், லால்குடி, மண்ணச்சநல்லூா், துறையூா் மற்றும் முசிறி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தலா ரூ. 10 லட்சமும் வீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இந்த நிதியின் மூலம் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டா், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல், முறையாக பின்பற்றி நோய் தீவிரத் தன்மையை உணா்ந்து தங்களை தனிமைப்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT