ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிகருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்
ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் தலித் கிறிஸ்தவா்களின் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிறிஸ்தவா்கள் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் தலித் கிறிஸ்தவா்களின் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிறிஸ்தவா்கள் கருப்புக் கொடியேந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செட்டிக்குளம் மாதா கோயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமை வகித்தாா். அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள தலித் கிறிஸ்தவா்கள், மயானத்துக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி மயானத்துக்குச் செல்ல பாதை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.