பெரம்பலூர்

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 91 மனுக்கள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 91 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்த ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 13 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 13 மனுக்களும், ஆலத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 14 மனுக்களும், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 11 மனுக்களும், ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் 40 மனுக்களும் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT