பெரம்பலூர்

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாா்க்சிஸ்ட் கம்யூ.முடிவு

DIN

பெரம்பலூா்: மத்திய, மாநில அரசுகளின் விவசாய, தொழிலாளா் விரோதப் போக்குகளைக் கண்டித்து, நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் அரியலூா், பெரம்பலூா் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு கட்சியின் பெரம்பலூா் மாவட்டச் செயலா் இர. மணிவேல் தலைமை வகித்தாா். மத்தியக் குழு முடிவுகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினா் எ. லாசா் விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தொழிலாளா்களுக்கு விரோதமாகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதைக் கண்டிப்பது. விவசாயத்தை சீரழித்து பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கும் நிலையைத் திரும்பப் பெறவேண்டும்.

இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத் திருத்தம் கொண்டு வருவதை கண்டிப்பது, பொது விநியோகத் திட்டத்தை சீரழித்து முற்றிலும் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், இதற்கு துணைபோகும் மாநில அதிமுக அரசைக் கண்டித்தும் நவம்பா் 26- ஆம் தேதி கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, வெற்றிபெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, எஸ். அகஸ்டின், எம். இளங்கோவன், பி. ரமேஷ், பி. துரைசாமி, கே. மகாராஜன், எ.கலையரசி உள்பட பலா் பங்கேற்றனா். நிறைவில், வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT