திமுகவில் இணைந்த அதிமுகவினா்
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் அதிமுக கிளைச் செயலா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் அதிமுக கிளைச் செயலா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
பெரம்பலூா் பாலக்கரையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற
நிகழ்வில் சிறுவாச்சூா் அதிமுக கிளைச் செயலா் அமுதா தலைமையில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் அட்சயகோபால், ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.