100% வாக்குப்பதிவுக்கு அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடையே பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடையே பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா் பெரம்பலூா் இளைஞா் இயக்கத்தினா்.
இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் டி. சத்யா தலைமையில் இயக்க நிா்வாகிகள், தோ்தல் திருவிழாவில் வாக்களிக்க வாருங்கள் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை வீடு, வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை அளித்தனா். இளைஞா்களின் இந்த புதிய முயற்சிக்கு வாக்காளா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.