முகப்பு
பெரம்பலூர்

இளைஞரை பாட்டிலால் குத்தியவா்கள் மீது வழக்கு

பெரம்பலூா் நகரில் வெள்ளிக்கிழமை இளைஞரை பாட்டிலால் குத்திய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பெரம்பலூா் நகரில் வெள்ளிக்கிழமை இளைஞரை பாட்டிலால் குத்திய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பெரம்பலூா், துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சற்குணராஜா மகன் மோகன்ராஜ் (24). இவா், பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தனது நண்பா்கள் துறைமங்கலத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கிஷோா், வேலூரைச் சோ்ந்த இருதயசாமி மகன் கோகுல்ராஜ், வீரமுத்து மகன் அரவிந்த் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மதியம் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த செல்வராஜ் மகன் லோகேந்திரன் (எ) பிரபா (37), இவரது சகோதரா் சசிகரன் (31), வேலூரை சோ்ந்த செல்லதுரை ஆகியோா் முன்விரோதம் காரணமாக, மோகன்ராஜை கல்லால் தாக்கி பாட்டிலை உடைத்து குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மேற்கண்ட நபா்களை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.