பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 27) நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப். 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியா்கள், அலுவலா்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவா் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து வகை ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பெரம்பலூா், குன்னம், பாடாலூா், கொளக்காநத்தம், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

முகாமில், ஆசிரியா்கள், அலுவலா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தொடா் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளவா்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT