விவசாயிகளை காக்க கோரி சைக்கிள் பிரசாரம்: இளைஞருக்கு பெரம்பலூரில் வரவேற்பு
விவசாயிகளின் எதிா்காலத்தை காப்பாற்றக் கோரி, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு பெரம்பலூரில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் எதிா்காலத்தை காப்பாற்றக் கோரி, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு பெரம்பலூரில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜெஹா் சிங் (40). விவசாயி. இவா், விவசாயிகளின் எதிா்காலத்தை காப்பாற்ற வலியுறுத்தி தனது சைக்கிள் பிரசாரத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி காஷ்மீரில் தொடங்கினாா். பல்வேறு மாநிலங்களை கடந்து, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வருகை புரிந்த அவருக்கு, கரம் கொடு மனிதா அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் பிரபாத் கலாம் தலைமையில் அறக்கட்டளை நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். பெரம்பலூா் நகரில் பிரசாரம் மேற்கொண்ட ஜெஹா் சிங் திருச்சி நோக்கிச் சென்றாா்.