முகப்பு
பெரம்பலூர்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.69.23 லட்சம்

பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கை ரூ.69.23 லட்சம் கிடைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கை ரூ.69.23 லட்சம் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஞானசேகரன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன், ஆய்வாளா் வினோத்குமாா் முன்னிலையில், 7 உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

அறநிலையத் துறை, கோயில் நிா்வாக அலுவலா்கள், வங்கி ஊழியா்கள் என சுமாா் 75 போ் இப்பணியில் ஈடுபட்டனா். இதில்

ரூ. 69,23,500 ரொக்கம், 439 கிராம் தங்கம், 699 கிராம் வெள்ளி, 170 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ரொக்கம் பெரம்பலூா் கனரா வங்கியில் செலுத்தப்பட்டது. தங்க, வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.