முகப்பு
பெரம்பலூர்

கை.களத்தூரில் கண்டன ஆா்ப்பாட்டம்

 வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் குழு உறுப்பினா் கே.எம். சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் சிங்காரவேலன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கை.களத்தூா் பேருந்து நிலையத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டுவதற்காக 2017- ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காத அலுவலா்களை கண்டித்தும், கிடப்பிலுள்ள துணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.