உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் கௌஷிக் ராஜசேகா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பொது சுரேஷ்குமாா், மனநலன் வினோத், சித்தா மணிமேகலை முன்னிலை வகித்தனா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனா்.
செவிலியா் கண்காணிப்பாளா் மாதேசுவரி, செவிலியா்கள் பொன்மணி, தமிழ்செல்வி, ரேணுகாதேவி, புவனா, ஆய்வக நுட்புநா் விஜயா உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.
முன்னதாக, ஆய்வக நுட்புநா் ஜஸ்டின் தினகரன் வரவேற்றாா். நிறைவில், ஆற்றுப்படுத்துநா் பழனிவேல்ராஜா நன்றி கூறினாா்.