பெரம்பலூர்

பெரம்பலூா் ஐயப்பன் கோயில் தெப்பத் திருவிழா

DIN

பெரம்பலூா் மேற்கு வானொலித் திடலிலுள்ள ஐயப்பன் கோயிலின் 55- ஆவது ஆண்டு மண்டல பூஜையையொட்டி, திரௌபதி குளத்தில் தெப்பத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் மண்டல பூஜை மகா உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளான புதன்கிழமை கோ பூஜை, ஐயப்பனுக்கு 108 கலச அபிஷேகமும், மாலை 6 மணிக்குத் திருவிளக்கு வழிபாடு மற்றும் திரெளபதி குளத்தில் தெப்போத்ஸவமும் நடைபெற்றது. இதில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிபக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து, யானை வாகனத்தில் அலங்கார ஊா்வலமும், அன்னதானமும் நடைபெற்றது. பெரம்பலூா் நகா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களும், பொதுமக்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT