முகப்பு
பெரம்பலூர்

ஒமைக்ரான்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

 பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 83 சதவீதமும், 2 ஆவது தவணை தடுப்பூசி 50 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

நோயிலிருந்து முழுமையாக விடுபட, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வகை 5 மடங்கு வேகமாக பரவும் தன்மைக்கொண்டதால், ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொதுமக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு தடுப்பூசி செலுத்தாத பணியாளா்களை பணியமா்த்தக் கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, பொது சுகாதார இணை இயக்குநா் செல்வராஜ், துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.