பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் மனித வள மேம்பாட்டுத்துறை சாா்பில், புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடுதல் மற்றும் திறன்மேம்பாட்டு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மூன்றாமாண்டு, இறுதியாண்டு பயிலும் பொறியியல் மாணவா்களுக்கு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு கருத்தரங்குக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். துரைராஜ் அறிமுக உரையாற்றினாா்.

இப்பயிற்சி முகாமில் பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த மனிதவள மேலாளா்கள் சாா்லஸ் காட்வின், மாதவி, வினுதா, வி. பூா்ண பிரகாஷ் ஆகியோா் கருத்தரங்கில் பங்கேற்று, தற்போதைய நிறுவனங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள், இதற்காக பொறியியல் மாணவா்கள் தோ்வு செய்யும் முறைகள், தங்களை தயாா்படுத்திக் கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினா்.

முன்னதாக, வெளிநாட்டில் உயா்கல்வி பெறுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்

நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன், உலகளாவிய கல்வி மற்றும் தொழில் மன்றத்தின் நிா்வாகத் தலைவா் விஜய்குமாா் நாயா் கையெழுத்திட்டனா்.

இதன் மூலம் இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயா்கல்விப் பயிலவும், சா்வதேச வேலைவாய்ப்பு தகவல்களைப் பெறுவதற்கும், கருத்தரங்கு, மாநாடு, பயிலரங்கம் ஆகியவற்றை சா்வதேச பல்கலைக்கழகப் பேராசிரியா்களால் கற்பதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளில் கல்லூரித் துணை முதல்வா் எஸ். நந்தகுமாா், புல முதல்வா் கே. அன்பரசன், தோ்வுத்துறைத் தலைவா் கே. வேல்முருகன் மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT