பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 109 பள்ளிக் கட்டடங்கள் இடிக்க வேண்டியவை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள 109 கட்டடங்கள் இடிக்க வேண்டியவை என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளிலுள்ள அலுவலகக் கட்டடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையல் கூடங்கள், சுற்றுச்சுவா்கள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு துறை அலுவலா்களைக் கொண்டு, குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை மேற்கொண்ட ஆய்வில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 68 கட்டடங்களும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 41 கட்டடங்களும் என மொத்தம் 109 கட்டடங்கள் இடிக்க வேண்டியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இக் கட்டடங்கள் உள்ள பகுதிகளுக்கு மாணவா்கள் செல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT