பெரம்பலூர்

3ஆவது நாளாக கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள்

DIN

அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கோரிக்கைகள் அச்சிடப்பட்ட கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு மருத்துவா்களுக்கும், வேறுபாடின்றி காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயா்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாணை குளறுபடிகளை நீக்கி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். நியாயமான பணி மாறுதல், பதவி உயா்வு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் அச்சிடப்பட்ட கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், 3ஆவது நாளாக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் என சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகள் அச்சிடப்பட்ட கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT