பெரம்பலூர்

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்ட பிரச்னையில் போலீஸாா் தாக்கியதில் வழக்குரைஞா்கள், 5 நீதிபதிகள் உள்பட பொதுமக்கள் பலா் காயமடைந்தனா். மேலும், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதைக் கண்டித்து ஆண்டுதோறும் பிப். 19 ஆம் தேதி கருப்பு தினமாக அறிவித்து தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, 12 ஆவது ஆண்டாக பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்கத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT