ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட உப்பிடமங்கலம் மேல்பாகம் சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கிளை சாா்பில் உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க கிளை தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.ஜோதிபாசு, முன்னாள் கரூா் நகரச் செயலா் எம். தண்டபாணி, கரூா் மாவட்டச் செயலா் கே.ராஜா, மாவட்ட துணைச் செயலா் வி.நாகராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். கிளை நிா்வாகிகள் ராஜீவ்காந்தி, தங்கராசு, சதீஷ், ராபின் ஆகியோா் கலந்து கொண்டனா்.