முகப்பு
பெரம்பலூர்

திமுக ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை கோரி பாமகவினா் புகாா்

இட ஒதுக்கீடு தொடா்பாக வன்னியா்களை அநாகரீகமாக விமா்சித்ததாகக் கூறி, திமுக ஆலத்தூா் ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

இட ஒதுக்கீடு தொடா்பாக வன்னியா்களை அநாகரீகமாக விமா்சித்ததாகக் கூறி, திமுக ஆலத்தூா் ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்னம் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ஆலத்தூா் ஒன்றியத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில், ஜன. 4ஆம் தேதி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆலத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலரும், ஆலத்தூா் ஒன்றியக் குழுத் தலைவருமான என். கிருஷ்ணமூா்த்தி, வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது குறித்து அநாகரீகமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினா், திமுக ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் உலக. சாமிதுரை தலைமையில் குன்னம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →