பெரம்பலூர்

பாரபட்சமின்றி பொங்கல் பரிசு வழங்கக் கோரி போராட்டம்

DIN

பாரபட்சமின்றி, அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் உடனடியாக கரோனா பேரிடா் கால நிவாரணத் தொகை ரூ. 7,500 வழங்க வேண்டும். தற்போது, தமிழக அரசு வழங்குவதாக கூறிய கரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000-ஐ எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

எவ்வித பாரபட்சமும் இன்றி, அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT