பெரம்பலூர்

மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு, சேவை வரியை நீக்க வலியுறுத்தல்

DIN

மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு, சேவை வரியை நீக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் க. பெரியசாமி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா், இணைச் செயலா் எஸ். சவுந்தர்ராஜன், பொருளாளா் சி. வெங்கடாசலம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், நோயாளிகளின் நலனுக்காக மருந்துப் பொருள்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

விசுவக்குடி நீா்த்தேக்கம் மற்றும் லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலங்களாக அறிவித்து, பெரம்பலூரிலிருந்து அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம். ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். அப்துல் ரசீது, ஆா். ரவி, எம். மாா்ட்டீன் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT